கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர உத்தியோகத்தர் கே.குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான கடிதத்தை கடந்த 11 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர வழங்கி வைத்தார்.
கனடா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச மாநாடுகளிலும், எமது நாட்டிலும் இடம்பெற்ற சிறப்பு பயிற்சிகளில் பங்கு பற்றி அதன் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலம் எமது நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சிறப்புத் தேர்ச்சிமிக்க வளவாளராகவும் செயற்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம், இலங்கை உள்ளூராட்சி நிறுவகம், மாகாண முகாமைத்துவ பயிற்சித் திணைக்களம், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு, ஆசியா மன்றம், கொமன்வெல்த் உள்ளூராட்சி அமையம் உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் செயற்றிட்ட ஆலோசகராகவும், திட்ட வளவாளராகவும் இன்றை வரை செயற்பட்டு வருகின்ற சிறந்த நிர்வாக அதிகாரியாக இருந்தும் வருகின்றார்.