ஏ 4 வீதியின் பெல்மதுலயிலிருந்து இரத்தினபுரி புதிய நகரம் வரையான வீதியில் நாளை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரைவாகன நெரிசல் ஏற்படக்கூடுமென பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 14 ஆம் திகதி உந்துவப் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பெல்மதுல்ல கல்பொத்தாவல விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன் தேவர் சிலை சிவனொளிபாத மலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளதால் குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்படுமென இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பலாபத்தல வீதியில் கல்பொத்தாவல ரஜமஹா விகாரையிலிருந்து குருவிட்ட எரட்ன வீதியில் இருந்து சிவனொளிபாத மலை நோக்கி இந்த ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
ஏ-04 பிரதான வீதியில் பெல்மதுல்லயிலிருந்து இரத்தினபுரி புதிய நகரம் வரையான வீதியில் நாளை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே அந்த காலப்பகுதியில் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சாரதிகளுக்கும் பொதுமக்களுக்கும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.