2024 – 11-30 ஆம் திகதிக்குள் கலால் வரி மூலம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பெற முடிந்தது என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் 120 வருட வரலாற்றில் 200 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தைப் பெறுவது இதுவே முதல் முறை என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இந்த வருமானம் மதுபான உற்பத்திக்கான கலால் வரியாகவும், புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் வரியாகவும் ஈட்டப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.