கொழும்பு
மின்சார கட்டணம் இன்று முதல் 18 வீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பூச்சியத்தில் இருந்து 30 வரையான யூனிட்டுக்கு 150 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டணம் 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 31 இல் இருந்து 60 வரையான யூனிட்டுக்கு 300 ரூபாவாக இருந்த நிர்ணய கட்டணம் 360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
61 முதல் 90 வரையான யூனிட்டுக்கான கட்டணம் 400 ரூபாயில் இருந்து 480 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், யூனிட் 91 இல் இருந்து 120 வரையில் 1000 ரூபாவாக இருந்த கட்டணம் 1180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
120 முதல் 180 வரையான யூனிட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1770 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன், 180 யூனிட்டுக்கு மேற்பட்ட பாவனையாளர்களுக்கான நிலையான கட்டணம் 2,000 ரூபாயில் இருந்து 2,360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண திருத்தம் கீழே:
0- 30 அலகு 150 ரூபாவிலிருந்து 180 ரூபாவாக உயர்வு
31- 60 அலகு 300 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக உயர்வு
61- 90 அலகு 400 ரூபாவிலிருந்து 480 ரூபாவாக உயர்வு
91- 120 அலகு 1,000 ரூபாவிலிருந்து 1,180 ரூபாவாக உயர்வு
121- 180 அலகு 1,500 ரூபாவிலிருந்து 1,770 ரூபாவாக உயர்வு
180 அலகுகளுக்கு மேல் 2000 ரூபாவிலிருந்து 2,360 ரூபாவாக உயர்வு