இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
14 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்ததகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று 19ம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
அடிக்கடி வெளிநாடு சென்று வரும் நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 33வயது வர்த்தகரே கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் இன்று காலை 6.05மணிக்கு டுபாயிலிருந்து 8 டீ 822 இலக்க பிட்ஸ் எயார் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தின் வெளியேறும் முனயத்தில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் இவரின் பயணப் பொதிகளை பரிசோதித்தபோது அவர் கொண்டு வந்த பொதிகளில் மறைத்துவைத்திருந்த 72 சிகரட் காட்டூன்கள் கைபற்றப்பட்டன. இதில் 14400 சிகரட்டுகள் இருந்துள்ளன. இதன் பெறுமதி 14 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை நடாத்திய பொலிஸார் சந்தேகநபரை பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 25 ம் திகதி சிகரட்டுகளுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.