இதுவரை இல்லாத அதிக சக்திவாய்ந்த ரொக்கெட்டை ஈரான் வெற்றிகரமாக நேற்று வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தியது. தொடா்ந்து தோல்வியைத் தழுவிவந்த சிமோா்க் திட்டத்தின்கீழ் செலுத்தப்பட்ட அந்த ரொக்கெட்டில் இரண்டு ஆய்வுக் கருவிகளும், சுற்றுப்பாதையில் திசைத் திரும்பும் சாதனமும் இருந்ததாக ஈரான் அறிவித்துள்ளது.
விண்வெளி ஆய்வுக்கான இதுபோன்ற திட்டங்களைப் பயன்படுத்தி தொலைதூர ஏவுகணைகளை ஈரான் தயாரிக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், இந்த ரொக்கெட்டை ஈரான் வெற்றிகரமாக ஏவியுள்ளது.