கண்டி – ஹந்தானை மலைப் பகுதிக்குச் சென்று காணாமல்போன மாணவர்களைக் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள பிரபலப் பாடசாலையொன்றில் கற்கும் 16 மற்றும் 17 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் குழுவே இவ்வாறு 04.12.2024 காணாமல் போயிருந்தது.
குறித்த மாணவர்கள் குழு தொடர்பில் காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர்கள் 05.12.2024 அதிகாலை மீட்கப்பட்டுள்ளனர்.