முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் மனைவிக்குச் சொந்தமான மிரிஹான எம்புல்தெனிய மண்டப வீதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் அற்ற நிலையில் சொகுசு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த சொகுசு வாகனம் சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைக்கப்பட்டது எனத் தெரியவந்தது.
அதன் பின்னர், கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி, மிரிஹானை காவல்துறையால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைதான லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் 05.12.2024 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதன்படி, குறித்த இருவரும் இன்றைய தினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, தலா ஒருவர் 10 இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.
அதேநேரம் குறித்த இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.