தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தொற்றாநோய் பிரிவைச் சேர்ந்த அதுல லியனபத்திரனவின் கூற்றுப்படி, நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் சுமார் 25,000 பேருக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் இடங்கள் பற்றிய தகவல்களை அருகிலுள்ள பிராந்திய சுகாதார அலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை தட்டம்மை நோய் அச்சுறுத்தல் தொடர்பிலான சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில், சுகாதார அமைச்ரு விரைவான பதிலளிப்பு பிரிவை நிறுவியுள்ளது.
இந்த பிரிவு தினமும் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை செயல்படும் என்பதுடன், தட்டம்மை உள்ளிட்ட தொற்று நோய்கள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும்.
மேலதிக விசாரணைகளுக்கு, பொதுமக்கள் சுகாதார அமைச்சின் பின்வரும் அவசர தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்: 011 – 744 65 13, 011-768 27 22, 011-768 28 72, அல்லது 011-768 26 62.