நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (04.11.2024) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.