க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி, டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 05ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு:
தொலைபேசி எண்கள்: 1911/ 0112784208/ 0112784537/ 0112785922
மின்னஞ்சல்: [email protected]