பல மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (02) மாலை 04.00 மணி முதல் நாளை மாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த பகுதிகளுக்கு எச்சரிக்கை நிலை அறிவிப்பை வெளியிட அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
பதுளை மாவட்டம்:- பதுளை, பசறை, ஹாலிஎலல, மீகஹகிவுல, பண்டாரவளை
கண்டி மாவட்டம்:- உடுதும்பர, உடபலாத, டெல்தொட்ட, கங்கவட கோரளை, பாதஹேவாஹெட, ஹாரிஸ்பத்து, பாததும்பர, யட்டிநுவர, மெததும்பர, தொலுவ, உடுநுவர, தும்பனே, பூஜாபிட்டிய, பன்வில, பஸ்பாகே கோரளை, அக்குரனை, அதலியகந்த, கங்க இஹல கோரளை
கேகாலை மாவட்டம்:- கேகாலை, ருவான்வெல்ல, புலத்கொஹுபிடிய, அரநாயக்க, மாவனெல்ல, யட்டியாந்தோட்டை
குருநாகல் மாவட்டம்: – ரிதிகம
மாத்தளை மாவட்டம்:- அம்பங்கக கோரளை, ரத்தோட்ட, உக்குவெல, வில்கமுவ, நாவுல, யடவத்த, பல்லேபொல, லக்கல பல்லேகம, மாத்தளை
நுவரெலியா மாவட்டம்: – ஹகுரன்கெத்த, கொத்மலை, வலப்பனை