இஸ்ரேலுடன் ஒப்புக் கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு லெபனான் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தயாராகவுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்துரைத்த ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஷீம் காசீம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், எதிர்காலத்தில் லெபனானின் தற்காப்புத் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.