ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் 27.11.2024 ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
அதன்படி சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடுவாவல நியமிக்கப் பட்டுள்ளதுடன், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக வை.எல்.மொஹமட் நவாவி நியமிக்கப்பட்டுள்ளார்.