இஸ்மதுல் றஹுமான்
கடந்த சில தினங்களாக பெய்யும் கனத்த அடை மழையினால் “தெபாஎல” நீரோடை பெருக்கெடுத்ததில் நீர்கொழும்பு- கட்டான எல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள கோமஸ்வத்த, றப்பர்வத்த, மைமண்கொடல்ல தழுபத்த, புவக்வத்த, கல்கட்டுவ, தெனியவத்த, செல்லகந்த, கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால்
சிறிய பாலங்களுக்கு மேலாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக பிரதேசத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளன.we are ready “வீ ஆ றெடி” வட்சப் குழும தொண்டர் உறுப்பினர்கள் படகுகளை பயன்படுத்தி வெள்ளத்தில் சிக்குண்டவர்களை வெளியே கொண்டுவருவற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றனர்.
வெள்ளம் காரணமாக அந்தப் பகுதியில் வாழும் சிலர் உறவினர் நண்பர்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர்.