தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் அடுத்த 6 மணித்தியாலங்களில் புயலாக வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பதுளை, கொழும்பு, கம்பஹா, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.