பத்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (27) மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, களுத்துறை, காலி, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் திடீரென நீர் கசிவு, சுவர்கள் மற்றும் நிலத்தில் விரிசல் ஏற்படுவதை அவதானித்தால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.