இஸ்மதுல் றஹுமான்
யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவேந்தல் செய்யும் உரிமையை உரிதிப்படுத்தக் கோரி சுதந்திர சிவில் பிரஜைகள் ஒன்றியம் 25ம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
இக்கடிதத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 34 பேர்
கையெழுத்திட்டுள்ளனர்.
அக்கடிதத்தின் விபரம்
ஜனாதிபதி/பாதுகாப்பு அமைச்சர்,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு 01.
கௌரவ ஜனாதிபதி அவர்களே,
1983-2009 உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை அமைதியாக நினைவேந்தல் செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு கோருதல்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மீது விசேட கவனத்தைச் செலுத்தி, வடக்கின் தமிழ் மக்களின் மேற்குறிப்பிடப்பட்டுள்ள உரிமையை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இங்கு கீழே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நாம் மிகுந்த அவசியத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவேந்தல் செய்வதற்குத் தடையேதும் இல்லை என மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களால் குறிப்பிடப்பட்டதாக 2024.11.24ம் திகதியிலான ஈழநாடு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் விசேடமாகக் குறிப்பிடுகின்றோம்.
• வரலாற்றில் முதன்முறையாக உங்களது தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அரச அதிகாரத்தைக் கையளிப்பதில் வடக்கின் பெரும்பான்மை தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.
• அதனூடாக முன்னாள் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி தெரிவித்திருப்பதுடன், நல்லதொரு மாற்றம் தொடர்பில் பாரிய நம்பிக்கையை வைத்துள்ளனர்.
• முன்னாள் ஆட்சியாளர்கள் 2009லிருந்து தொடர்ந்தும், உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை அமைதியான முறையில் நினைவேந்தல் செய்வதற்கான வடக்கு மக்களின் உரிமை மீறியுள்ளனர்.
• எனினும் இப்போது புதிய அரசாங்கத்தின் கீழ் நவம்பர் 27ம் திகதி, உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை அமைதியான முறையில் நினைவேந்தல் செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என வடக்கு மக்கள் எதிர்பார்ப்புகளை ஏற்றி வைத்திருக்கின்றனர்.
• மேலும், உயிரிழந்தவர்களை நினைவேந்தல் செய்வதைத் தடுப்பதால் மதச் சுதந்திரம், மனச்சாட்சிக்கான சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரம், வெளிப்படுத்தும் சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் என்பவற்றை மீறும் நாடாக இலங்கை சர்வதேச ரீதியாக அபகீர்த்திக்கு ஆளாகியுள்ளது,
• குறிப்பாக 1971 மற்றும் 1988-89 கிளர்ச்சிகளின் போது உயிரிழந்தவர்களை நினைவேந்தல் செய்வதற்கான தென்னிலங்கை மக்களின் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலைமையின் கீழ், உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவேந்தல் செய்வதற்கு வடக்கு மக்களுக்குள்ள உரிமை மீறப்படுவதன் மூலம், அம்மக்கள் பக்கச்சார்புடன் நடத்தப்படுவதை ஒருபோதும் நீதியானது எனக் கருத முடியாது.
• அதனூடாக ‘அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகப் பிறந்துள்ளார்கள். கௌரவம் மற்றும் உரிமைகளால் சமமானவர்கள். நீதி, அநீதி பற்றிய உணர்வுடனும் மனச்சாட்சியுடனும் அவர்கள், ஒருவரையொருவர் சகோதரத்துவத்துடன் கூடிய உணர்வுடனே நடத்த வேண்டும்.” என உலக மனித உரிமைகள் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது வாசகமே மீறப்பட்டுள்ளது.
- பேராசிரியர் ஜயதேவ உயன்கொட
- விஜயானந்த ஜயவீர
- பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம
04.எஸ். சிவகுருநாதன்
- பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம
- லயனல் போபகே
- ஜோசப் ஸ்டாலின்
- கே.டபிள்யூ.ஜனரஞ்சன 08.சின்தக ராஜபக்ஷ
- எழுத்தாளர் மஹிந்த ஹத்தக
10.டாக்டர் சைபுல் இஸ்லாம்
- எழுத்தாளர் மஹிந்த ஹத்தக
- துஷாரி மடஹபொல
- சுனந்த தேசப்பிரிய
- ஹாசிம் சாலி
- ஹேமன் குமார
- கௌரவ அருட்தந்தை டெரன்ஸ் பிரனாந்து
- ரஞ்ஜித் ஹேநாயகாரச்சி
- மரீன் நிலாஷினி
- ஈ.எம்.பீ.ඊ. மெனிகே
- கெளரவ அருட்தந்தை ரொஹான் சில்வா
- கெளரவ அருட்தந்தை குசும் குமாரசிரி
- மேரியன் பிரதீபா
- கலாநிதி ஹேரத் எம்.ஆரியரத்ன
- நலின ரஞ்ஜித் பிரனாந்து
- வின்சன்ட் புலத்சிங்கள
- ரோய் ரொற்ரிகோ
- மானெல் பெரணாட்டோ
- டாக்டர் எம்.ஜே. மொஹமட் ஹசன்
- குமுதினீ சாமுவெல்
- ஜயதிலக பண்டார
- பிரிட்டோ பிரனாந்து
- பீ.முத்துலிங்கம்
- சட்டதரணி எச்.ஐ.எம்.சஹ்ஃபி
- வை.எம்.நவரத்ன
- ரீ.எம். பிரேமவர்தன