எஸ். சினீஸ் கான்)
பலஸதீனுக்கு எதிராக இஸ்ரேல் நடாத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை எல்லா நாடுகளும் இணைந்து கண்டிக்க வேண்டும் எனவும் கடந்த பத்து நாட்களாக இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடாத்துவதை வன்மையாக கண்டிப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.
புதன்கிழமை (18) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
பலஸ்தீன் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படாமல் மின்சாரம், நீர் வசதிகளை நிறுத்தி தாக்குதல் நடாத்துகிறார்கள். மிக அண்மையில் வைத்திய சாலையில் கூட மிகக் கொடூரமாக தாக்குதல் நடாத்தி சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்கள் இழக்கப்பட்டிருக்கிறது.
உலகநாடுகள் அனைத்தும் மனிதாபிமானம், சாமாதானம் தொடர்பில் பேசுகிறோம், எத்தனையோ மாநாடுகள் நடாத்துகிறோம் அவ்வாறிருந்தும் இந்த இரக்கமற்ற தாக்குதல்கள் தொடர்பில் எந்த நாடுகளும் பேசாமல், யுத்தத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருக்கிறார்கள் எனவும் முஸ்லிம் நாடுகள் கூட அறிக்கைகள் மாத்திரம் விட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.