ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்திடம் இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு முறையான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களில் இலங்கை மின்சார சபை நஷ்டம் காரணமாக ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்காத நிலையில், சபையின் நடப்பு இலாபத்தன்மையை கருத்திற்கொண்டு ஊழியர்களால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டாலும், ஊழியர்களின் போனஸ் தொடர்பாக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.