வவுனியா – பேராறு அணையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பேராறு அணையை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.
அந்தவகையில் பேராறு அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் அதன் 2 வான்கதவுகளும் 1 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நீர் செல்லும் பகுதியிலும், பேராறு அணையின் கீழ் பகுதியிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.