இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு களப்பை பார்வையிட போட் சவாரி செய்த போது போட் கவிழ்ந்ததில் தந்தையும் மகளும் நீரில் மூழ்கியுள்ளனர். மேலும் இருவர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளனர்.
நீர்கொழும்பு, சிறிவர்தன பிளேஸைச் சேர்ந்த ரணில் பிரனாந்து அவரது மகள் நிலூஷா நெத்மி பிரனாந்து ஆகிய இருவருமே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
59 வயதான டொனீ பிரனாந்து மற்றும் 5 வயது தினா பிரனாந்து இருவருமே நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுஉளளனர்.
இந்த போட் பயணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பயணித்துள்ளனர்.
நீர்கொழும்பு, பள்ளன்சேன தேவஸ்தானத்தின் பங்குத் தந்தை எண்டனி கோமிக் குறேயும் போட் சவாரியில் சென்றுள்ளார்.
கடற்படையின் களணி முகாமின் கடற்படையினர், துன்கல்பிட்டி பொலிஸார் பிரதேச வாசிகளின் உதவியுடன் நீரில் மூழ்கியவர்களை தேடுகின்றனர்.