இஸ்மதுல் றஹுமான்
“அரசு எதுவாக இருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்ற தொனிப்பொருளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டம் நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் கட்டுவபிட்டி சந்தியில் கொட்டும் மழையிலும் இடம் பெற்றது. நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க பிதாக்கள், சிவில் சமூக செயல்பாட்டாலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இங்கு படுகொலைக்கு நீதியை நிலைநாட்டும் வரை நாம் விழிப்புடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வு பிரிவின் தொடர்பை வெளிப்படுத்து, இனவாதம் மதவாதம் பதவிக்காகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரச அதிகாரத்தை பெறுவதற்காக திட்டமிடப்பட்ட மனிதப் படுகொலை போன்ற சுலோக ஆட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.