2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலம் தற்போது நடைபெற்றுவருகின்றது.
இந்த நிலையில் 1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் இறுதியாக ஏலத்தில் இடம்பெறவுள்ளனர்.
இதன்படி இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ரிஷப் பண்ட் பதிவாகியுள்ளார்.
இதற்கமைய அவர் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியினால் 27 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.