அனுராதபுரத்தில் சுமார் 8 மில்லியன் பெறுமதியான திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட பெறுமதியான அம்பர்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த இருவரை நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நொச்சியாகம பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து 23.11.2024 முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த அம்பர் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 8 மில்லியன் பெறுமதியான ஒரு கிலோ கிராம் அம்பர் வைத்திருந்தனர்.
தங்கால்லை பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரும், கலென்பிந்துனுவெவ கொக்கவெவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவரும், போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.