ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை உடனடியாக பதவி நீக்காவிட்டால், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒன்றிணைத்துக் கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
குறித்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள்23.11.2024 பிற்பகல் ஒன்று கூடியிருந்தனர்.
அதன்போது, ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தரை பதவி நீக்குவதற்காக எதிர்வரும் புதன்கிழமை வரை நிர்வாகத்துக்குக் கால அவகாசம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரின் செயற்பாடுகளுக்கு எதிராகப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா தொழிற்சங்கங்கள் கடந்த 5 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன, தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக அண்மையில் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.