மினுவங்கொடை நகரில் 7 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தைத் திருடி, தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக காவல்துறை பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.
குறித்த இரண்டு சந்தேக நபர்களும் தற்போது கம்பஹா பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, 37 மற்றும் 40 வயதுடைய குறித்த சந்தேக நபர்களின் படங்கள் காவல்துறையினால் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் கட்டான மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெறுமாயின் 071 859 1608 அல்லது 071 859 1610 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.