நாட்டில் அரிசி விற்பனை வரையறுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக பிரபல சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒருவருக்கு விற்பனை செய்யக் கூடிய அரிசியின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.
ஒருவருக்கு மூன்று கிலோ அதிகபட்சமாக அரிசியே விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு அரசாங்கம் அரிசி விற்பனையில் எவ்வித வரையறைகளையும் நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்பொழுது அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலை வருகின்றது. எவ்வாறு எனினும் இந்த தட்டுப்பாடு காரணமாக அரசாங்கம் அரிசி விற்பனையை வரையறுத்து உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
அரிசி விற்பனையை வரையறுத்து உள்ளதாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளியிடப்படவில்லை.
அரிசியை விற்பனையை வரையறுப்பதற்கு எவ்வித உத்தரவுகளும் பிறப்பிக்கவில்லை என அரசாங்க தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தையில் அரிசிக்கான கிராக்கி அதிகரித்துள்ள காரணத்தினால் அந்த அளவுக்கு நிரம்பல் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் இதனால் அரிசியின் விலைகள் அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அரிசிக்கான தட்டுப்பாடு செயற்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்