புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ள நிலையில் முதலில் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், இன்று பிற்பகல் புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, இதன்போது சுமார் 27 பேர் பிரதி அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.