பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசார செலவினங்கள் அடங்கிய வருமான செலவின விபரத் திரட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விபரத் திரட்டைத் தேர்தல் பெறுபேறு வெளியாகி 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட்ட மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருக்கும், தேசிய பட்டியலில் பெயர் குறிக்கப்பட்ட வேட்பாளர்கள் தமது வருமான செலவின விபரத் திரட்டுக்களைத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திடமும் கையளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.