பதிவு செய்யப்படாத சொகுசு வாகனமொன்று மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையும் அவரது மனைவிக்கு நவம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (18) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் இருவருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது