குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பரிசோதகரும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நேற்று (18) நிராகரித்துள்ளது.
வாகன விபத்து சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிப்பட்டிருந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையையடுத்து தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த மனு நிராகரிக்கபடபட்டுள்ளது.
இந்த மனுவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அதிகாரிகள் மற்றும் சட்ட மா அதிபர் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்