புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது நிறைவடைந்துள்ளது.
அதற்கமைய, 21 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
18.11.2024 முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.
பிரதமர் – ஹரிணி அமரசூரிய
அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர்கள்
- ஹரிணி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சர்
- எச்.எம்.விஜித ஹேரத் – வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
- பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு
- சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
- சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்
- கே.டி.லால்காந்த – கமத்தொழில், கால்நடை வழங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
- அனுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர்
- இராமலிங்கம் சந்திரசேகரன் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்
- பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர்
- சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்
- ஆனந்த விஜயபால – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
- பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
- பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய விவகாரம் மற்றும் கலாசார அமைச்சர்
- நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
- சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
- சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
- வசந்த சமரசிங்க – வர்த்தக, வாணிப, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
- பேராசிரியர் கிருஷாந்த அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
- பேராசிரியர் அணில் ஜெயந்த பெர்ணான்டோ – தொழில் அமைச்சர்
- குமார ஜெயகொடி – வலுசக்தி அமைச்சர்
- தம்மிக பத்திரகே – சுற்றாடல் அமைச்சர்