தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 141 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. குறித்த பெறுபேறுகள் அதனடிப்படையில் தேசிய மக்கள் சக்திக்கு 18 தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய தேசிய மக்கள் சக்தியில் தேசிய ப்பட்டியல் உறுப்பினர்களாக பிமல் ரத்நாயக்க, கலாநிதி அநுர கருணாதிலக, பேராசிரியர் உபாலி பண்ணிலகே, எரங்க உதேஸ் வீரரத்ன, அருண ஜயசேகர, கலாநிதி அர்ஷன சூரியபெரும, ஜனித ருவான் கொடிதுவக்கு, புண்ணியா ஶ்ரீகுமார கொடிதுவக்கு, ராமலிங்கம் சந்திரசேகரன், நஜித் இந்திக, சுகத் திலகரத்ன, லக்மாலி ஹேமசந்திர, சுனில் குமார கமகே, காமினி ரத்நாயக்க, பேராசிரியர் ருவான் ரணசிங்க சுகத் வசந்த் டி சில்வா, அபூபக்கர் ஆதம்பாவா, உபாலி சமரசிங்க ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.