”தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் நின்று தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கப்பால் புதிதாக பெயரிடப்பட்டு தேசியப்பட்டியல் எம்.பி.க்களாக வேறு எவரும் பாராளுமன்றத்தில் பிரவேசிக்க முடியாது.