ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் போக்கு குறித்து இன்று (16) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்திரத்தன்மை மற்றும் கட்சியின் போக்கினை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.