2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 17,140,354 வாக்காளர்கள் தேர்தலுக்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தகுதி பெற்ற வாக்காளர்களில் 11,815,246 பேர் வாக்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 5,325,108 வாக்காளர்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.