பாராளுமன்ற தேர்தலில் தனித்துவமான வெற்றியை வழங்கிய வாக்காளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது ‘எக்ஸ்’ கணக்கில் குறிப்பை ஒன்றை இட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் ‘மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (15) நடைபெற்ற 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.