விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில் வாய்ப்புகளுக்குக் கொரியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் சங்கம் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கும் அந்த சங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்காக இலங்கைத் தொழிலாளர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.