(உமர் அறபாத் -ஏறாவூர்)
மட்டக்களப்பு”விழுது” அமைப்பின் ஏற்பாட்டில் நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எனும் கருப்பொருளில் வீதி விழிப்புணர்வு நாடகம் ஒன்று 17/09/2024 செவ்வாய்கிழமை அன்று ஏறாவூர் வாவிக்கரை வீதியில் இடம்பெற்றது.
இவ்வீதி விழிப்புணர்வு நாடகத்தின் மூலமாக ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற அறிவினை பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாட்டின் பல பாகங்களிலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக விழுது அமைப்பினர் தெரிவித்தனர்.