சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் Kusal Mendis மற்றும் Avishka Fernando ஆகியோர் சதங்களை கடந்துள்ளனர்.
தம்புள்ளையில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 37 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 222 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பாடி வரும் Kusal Mendis மற்றும் Avishka Fernando ஆகியோர் சற்றுமுன்னர் அடுத்தடுத்து சதங்களை கடந்தனர்.
Kusal Mendis மற்றும் Avishka Fernando ஆகியோர் ஒருநாள் போட்டியில் தமது 4ஆவது சதத்தினை பூர்த்தி செய்து துடுப்பாடி வருகின்றனர்.