அறுகம்குடா தொடர்பில் அமெரிக்க விடுத்த பயண எச்சரிக்கையை அந்த நாடு நீக்கிக்கொள்ளவேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 23ம் திகதி அறுகம்குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வேண்டுகோள்விடுத்தது
அறுகம்குடாவில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் தாக்குதல் இடம்பெறலாம் என நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க தூதரகம்தெரிவித்திருந்தது.