சமூக ஊடகங்கள் ஊடாக நேற்று மதியம் 12.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு மொத்தம் 490 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கைக்கமைய சமூக ஊடக நிறுவனங்கள் 184 முறைப்பாடுகள் தொடர்பான இணைப்புகளை நீக்கியுள்ளது.
இருப்பினும், 87 முறைப்பாடுகள் தொடர்பான இணைப்புகள் அல்லது உள்ளடக்கத்தை அகற்ற சமூக ஊடக நிறுவனங்கள் மறுத்துவிட்டன.
219 புகார்கள் தொடர்பான உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் மதிப்பாய்வு செய்யவில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வெறுப்புப் பேச்சு தொடர்பில் 67 முறைப்பாடுகளும், பொய்த் தகவல்கள் தொடர்பில் 52 முறைப்பாடுகளும், இனம் மற்றும் மதத்திற்கு எதிரான அவதூறு அறிக்கைகள் 179, தேர்தல் பிரச்சாரத்திற்கு சிறுவர்களைப் பயன்படுத்துதலுக்காக 39 மற்றும் தவறான தகவல் தொடர்பான உள்ளடக்கத்தின் மீது 29 மற்றும் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய இணைப்புகளுக்காக 124 முறைப்பாடுகள் என பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளது.