மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான புகையிரத வீதி அபிவிருத்தி காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் புகையிரத சேவை நாளை 12 ஆம் திகதியிலிருந்து மீண்டும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமையை நாளை முதல் கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான புகையிரத சேவையானது,
இலக்கம் 5003 – கொழும்பு கோட்டையிலிருந்து – தலைமன்னார்
கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படல் பி.ப. 16.15 – தலைமன்னாரினை அடைதல் பி.ப. 22.15 (2024.11.12ஆம் திகதியிலிருந்து)
இலக்கம் 5004 – தலைமன்னாரிலிருந்து – கொழும்பு கோட்டை
தலைமன்னாரிலிருந்து புறப்படல் மு.ப. 04.15 – கொழும்பு கோட்டையினை அடைதல் மு.ப. 10.15 (2024.11.13ம் திகதியிலிருந்து) என்ற அடிப்படையில் இடம்பெறுமென அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது