மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, மின்சாரத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். சிறிது கால அவகாசம் கொடுங்கள் மின் கட்டணத்தை 30%க்கும் மேல் குறைப்போம்.கால அவகாசம் தாருங்கள் எரிபொருள் விலையைக் கூட குறைக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.