பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தின் பததும்பர, தும்பனை, உடுதும்பர, யட்டிநுவர, பஹதஹேவாஹட்ட நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதுளை மாவட்டத்தின் ஹல்தும்முல்லை, வெலிமடை, லுணுகல, பண்டாரவளை, கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, தெல்தோட்டை கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, புளத்கொ{ஹபிட்டிய, வரகாபொல, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல,தெரணியாகல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கன, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை, குருவிட்ட இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது