நாட்டில் உள்ள சில பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (09) மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, பசறை மற்றும் ஹாலி எல, கண்டி மாவட்டத்தில் பததும்பர மற்றும் தும்பனை, கேகாலை மாவட்டத்தில் தெரணியகலை, தெஹியோவிட்ட, கலிகமுவ, ரம்புக்கன, புலத்கொஹுபிட்டிய, வரகாபொல, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல மற்றும் கேகாலை, குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை, குருவிட்ட, மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.