எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.
ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச துறை ஊழியர்கள் இன்றும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பின் பிரதான 3 நாட்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான மேலதிக தினங்களாக நேற்றும் இன்றும் நியமிக்கப்பட்டுள்ளன.
நேற்று வாக்களிப்பவர்கள் தங்கள் பணியிடத்தை சேர்ந்த மாவட்ட செயலகத்தில் வாக்களிக்கலாம்.
மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் 736,000 க்கும் அதிகமான நபர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.