பிரபல பயண இதழான “Wanderlust” வாசகர்களின் வாக்கெடுப்பின் மூலம் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற Wanderlust Readers Travel Awards சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது.
சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கவர்ச்சிகரமான மற்றும் மாறுபட்ட அனுபவங்களைப் பெறும் திறனின் அடிப்படையில் இலங்கை சுமார் 200,000 வாசகர்களின் வாக்குகளைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு, Wanderlust பயண இதழ் இலங்கையை உலகின் 8ஆவது கவர்ச்சிகரமான நாடாக அறிவித்தது.
இலங்கை பற்றிய சுருக்கமான குறிப்பை முன்வைத்து Vandalust இதழ் தெரிவித்துள்ள விடயத்தில், இந்தியப் பெருங்கடலின் முத்து என்றும் அழைக்கப்படும் இலங்கையின் வரலாற்று நினைவுச்சின்னங்களில் சிகிரியா, தம்புள்ளை குகைக் கோயில் மற்றும் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையின் இடிபாடுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.