சட்டவிரோதமாக சொகுசு கார் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கண்டி கல்தென்ன ஆலயத்தின் போதகரின் வாகன கராஜிலிருந்து மற்றுமொரு சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த போதகர் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இக் காரை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட காரின் இலக்கத்தை கொண்ட மற்றுமொரு கார் குருநாகல் – ஹெட்டிபொல பிரதேசத்தில் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, குறித்த வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.